இந்தோனேசியாவில் 3 நில அதிர்வுகள் பதிவு; இலங்கையை பாதிக்காது என தகவல்

இந்தோனேசியாவில் 3 நில அதிர்வுகள் பதிவு; இலங்கையை பாதிக்காது என தகவல்

இந்தோனேசியாவில் 3 நில அதிர்வுகள் பதிவு; இலங்கையை பாதிக்காது என தகவல்

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2021 | 8:42 pm

Colombo (News 1st) இந்தோனேசியா மற்றும் அந்நாட்டை அண்மித்த வலயத்தில் மூன்று நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இதில் 7.5 magnitude சக்திவாய்ந்த நில அதிர்வும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை அண்மித்த லோயல்டி தீவிற்கு தென்கிழக்கு திசையிலேயே இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்கு தென்மேற்கு கடற்பகுதியில் 6.2 magnitude நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

மற்றுமொரு 5.1 magnitude நில அதிர்வும் பதிவாகியுள்ளது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களுக்கேற்ப, குறித்த நில அதிர்வுகளினால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்