887 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நேற்றைய தினம் 887 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 09-02-2021 | 10:13 AM
Colombo (News 1st) இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 887 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 09 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். எஞ்சியவர்களுள் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 214 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 208 பேரும் கண்டி மாவட்டத்தில் 20 பேரும் கேகாலை மாவட்டத்தில் 50 நபர்களும் மொனராகலை மாவட்டத்தில் ஒருவரும் மாத்தளை மாவட்டத்தில் 09 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 17 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பகுதியில் 181 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பிரதேசத்தில் 15 பேருக்கும் கொள்ளுப்பிட்டி பகுதியில் மூவருக்கும் நாரஹேன்பிட்ட பகுதியில் 07 பேருக்கும் பொரளையில் நால்வருக்கும் மருதானை பிரதேசத்தில் இருவருக்கும் புறக்கோட்டை பகுதியில் ஒருவருக்கும் கொட்டாஞ்சேனை பகுதியில் இருவருக்கும் கிரேண்ட்பாஸ் பகுதியில் ஒருவருக்கும் மட்டக்குளி பிரதேசத்தில் ஐவருக்கும் இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பகுதியில் 22 பேரும் கட்டுநாயக்க பகுதியில் இருவரும் நீர்கொழும்பில் 06 பேரும் வத்தளை பகுதியில் 07 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பகுதியில் இருவரும் அம்பாறை பிரதேசத்தில் ஒருவரும் இகினியாகல பகுதியில் 29 பேரும் கல்முனை பகுதியில் ஒருவரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். புத்தளம் - தங்கொட்டுவ பகுதியில் இருவருக்கும் சிலாபத்தில் இருவருக்கும் மாதம்பை பகுதியில் ஒருவருக்கும் வென்னப்புவ பிரதேசத்தில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வரையில் நாட்டில் மொத்தமாக 70,235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 64,141 பேர் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் நேற்றைய தினம் (08) மேலும் 09 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. ஊர்காவற்றுரை, கொழும்பு - 15, குருதெனிய, கொழும்பு - 12, நீர்கொழும்பு, குருநாகல், ஹொரணை, மாவனெல்லை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலே குறித்த 09 மரணங்களும் உறுதி செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில், நேற்றைய தினம் (08) 12,145 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.