அம்பியூலன்ஸ் சேவைக்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வு 

கொழும்பு, கம்பஹாவிற்கு வெளி மாவட்டங்களிலிருந்து அம்பியூலன்ஸ் சேவையை பெற தீர்மானம் 

by Staff Writer 09-02-2021 | 7:51 AM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் கொரோனா நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்கள் இரு நாட்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அம்பியூலன்ஸ் சேவைக்கான தட்டுப்பாடு காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களை வீடுகளுக்கும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் செல்வதற்கு தாமதம் ஏற்படுகின்றது. இந்த தாமதத்தை நிவர்த்தி செய்வதற்காக வெளிமாவட்டங்களிலுள்ள சிறிய வைத்தியசாலைகளின் அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சிறிய வைத்தியசாலைகளில் அம்பியூலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுவதில்லை எனவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் மேலும் இதன்போது கூறியுள்ளார்.