அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் நிர்ணய விலை இரத்து 

by Staff Writer 09-02-2021 | 2:11 PM
Colombo (News 1st) சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, நிர்ணய விலைக்கான வர்த்தமானி திருத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் காணப்பட்ட விலைக்கேற்ப நிர்ணய விலை அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டதாகவும், அது தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.