தீயினால் சேதமடைந்த ஹேகித்த ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய மண்டபத்தை புனரமைக்க 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2021 | 5:52 pm

Colombo (News 1st) வத்தளை – ஹேகித்த ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தீயினால் சேதமடைந்த மண்டபத்தை புனரமைக்க இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நிதி ஒதுக்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு தொடர்பிலான அறிவித்தல் நேற்று ஹேகித்த ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபையிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர் பாபு சர்மா, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருணாச்சலம் உமா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்