சம்பூரில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

சம்பூரில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

சம்பூரில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2021 | 4:15 pm

Colombo (News 1st) திருகோணமலை – சம்பூர், சந்தனவெட்டை பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

காட்டு யானைகளை தடுப்பதற்காக சட்டவிரோதமாக குறித்த வேலி இடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திரன் ரஜீதன் என்ற 8 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மின்சார வேலி இட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்