30 - 60 வயதுக்கிடைப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி 

by Staff Writer 08-02-2021 | 2:13 PM
Colombo (News 1st) மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் COVID - 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்ட தொழில் செய்யும் அனைத்து பிரஜைகளுக்கும் COVID - 19 தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 60 வயதிக்கு மேற்பட்டோருக்கும் COVID - 19 தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது திட்டமிடப்பட்டுள்ள 4,000 மத்திய நிலையங்களில் நாளாந்தம் 300 பேருக்கு தடுப்பூசி ஏற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். அதற்கமைய நாளாந்தம் சுமார் 6 இலட்சம் பேருக்கு COVID - 19 தடுப்பூசியை ஏற்ற முடியும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.