நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 08-02-2021 | 6:18 PM
நடிகர் சூர்யாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் அச்சத்துடன் முடங்கிவிட முடியாத அதேநேரம் பாதுகாப்புடனும் அவதானத்துடன் இருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் வைத்தியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.