வட இந்தியாவில் பனிப்பாறை உடைந்ததில் வௌ்ளப்பெருக்கு

வட இந்தியாவில் பனிப்பாறை உடைந்ததில் வௌ்ளப் பெருக்கு; 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் 

by Staff Writer 07-02-2021 | 4:49 PM
Colombo (News 1st) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் சிக்கி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தின் ஜோசிமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனிச்சரிவினால் ஆலாக்நந்தா மற்றும் தவுலிகங்கா ஆறுகளில் திடீரென பாரிய வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வௌியேற்றப்பட்டனர். வௌ்ளநீரினால் வீடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. அத்துடன் ரிஷிகங்கா மின் உற்பத்தி ஆலை சேதமடைந்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஏராளமான குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 3 ஹெலிகொப்டர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் ஏழு சுழியோடிக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்டுக்கு ஆதரவாக இந்தியா முழுவதுமே இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென நாடு முழுவதும் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.