மேல் மாகாண விசேட சுற்றிவளைப்பில் 1406 பேர் கைது 

மேல் மாகாண விசேட சுற்றிவளைப்பில் 1406 பேர் கைது 

by Staff Writer 07-02-2021 | 7:44 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 1,406 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனையின் பேரில் நேற்று (06) காலை 06 மணி முதல் பிற்பகல் 04 மணி வரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 44 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 681 பேர் அடங்குகின்றனர்.

ஏனைய செய்திகள்