மியன்மாரில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

by Chandrasekaram Chandravadani 07-02-2021 | 3:43 PM
Colombo (News 1st) மியன்மாரின் யங்கூன் நகரில் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக முன்னெக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இணைந்துகொண்டுள்ளனர். ஜனநாயகத்தை பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் AFP செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். யங்கூன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் பொலிஸ் ட்ரக்குகள் நிறுத்தப்பட்டிருந்ததுடன், கலகத்தடுப்புப் பிரிவினர் நிலைகொண்டிருந்ததாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.