சிறிய உலக முடிவில் காணாமல்போன சிரச TV ஊழியரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு 

சிறிய உலக முடிவில் காணாமல்போன சிரச TV ஊழியரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு 

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2021 | 9:50 pm

Colombo (News 1st) மடுல்சீமையிலுள்ள சிறிய உலக முடிவை பார்வையிடச் சென்ற 3D அனிமேஷன் தயாரிப்பாளரான தினுர விஜயசுந்தர காணாமல் போயுள்ளார்.

இன்று (07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினுர விஜயசுந்தர என்பவர் 3D அனிமேஷன் தயாரிப்பாளராக சிரச தொலைக்காட்சியில் பணிபுரிகின்றார்.

35 வயதான அவர் களுத்துறை மக்கொன பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவருடன் 6 வைத்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் உலக முடிவை பார்வையிடச் சென்றிருந்ததாக பொலிஸார் கூறினர்.

இவர்கள் நேற்றிரவு (06) உலக முடிவை பார்வையிட சென்றதுடன், அங்கேயே இரவுப் பொழுதை கழித்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தினுர விஜயசுந்தரவை தேடும் பணிகளை மேற்கொண்ட போதிலும், அதிக பனி காரணமாக தேடுதல் நடவடிக்கை தாமதமாகியது.

மடுல்சீமை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்