100 ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம்: உலக சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்

100 ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம்: உலக சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்

100 ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம்: உலக சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2021 | 4:42 pm

Colombo (News 1st) சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது.

100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதமடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டை சதம் கடந்தார். இதன் மூலம் பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளார். 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிக்சர் விளாசி இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன், 100 ஆவது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற இன்சமான் உல் ஹக்கின் உலக சாதனையையும் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக் 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 184 ஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இதேபோல், 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் 100 போட்டிகளில் 8,405 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஜோ ரூட் 8,458 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இப்போட்டியில் ஜோ ரூட் 218 ஓட்டங்கள் குவித்த நிலையில், நதீம் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்போது, இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 477 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்