கஸகஸ்தானிலிருந்து 160 சுற்றுலாப் பயணிகள் வருகை

கஸகஸ்தானிலிருந்து 160 சுற்றுலாப் பயணிகள் வருகை

by Staff Writer 06-02-2021 | 4:15 PM
Colombo (News 1st) கஸகஸ்தானிலிருந்து 160 சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டை வந்தடைந்தனர். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய கஸகஸ்தானின் Air Astana விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த சுற்றுலாப் பயணிகள் யால, சீகிரியா, காலி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்ததன் பின்னரே அவர்கள் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடவுள்ளனர்.