மேல் மாகாணத்தில் மிக விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்: கல்வி அமைச்சின் செயலாளர்

மேல் மாகாணத்தில் மிக விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்: கல்வி அமைச்சின் செயலாளர்

மேல் மாகாணத்தில் மிக விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்: கல்வி அமைச்சின் செயலாளர்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2021 | 3:44 pm

Colombo (News 1st) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மேல் மாகாணத்தில் மிக விரைவில் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆரம்பப் பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்காக சுகாதார வழிமுறைகளுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரும் பரிந்துரைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

குறித்த பரிந்துரைகளுக்கான அனுமதி கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

50 – 60 மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கும், ஏனைய பாடசாலைகளை சுகாதார வழிமுறைகளுடன் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவும் கல்வி பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சை நிறைவு பெற்றதும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு மேலும் சிலர் பரிந்துரைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அனைத்து பரிந்துரைகளையும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்