A3 பிரதான வீதி நாளை (06) மூடப்படவுள்ளது

A3 பிரதான வீதி நாளை (06) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படவுள்ளது

by Staff Writer 05-02-2021 | 3:09 PM
Colombo (News 1st) கொழும்பு முதல் புத்தளம் வரையான A3 பிரதான வீதி நாளை (06) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு கல்கந்த சந்தியிலுள்ள ரயில் கடவையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.