27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

8 ஆம் திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

by Bella Dalima 05-02-2021 | 5:02 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது. இந்த விலை குறைப்பு 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (05) தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, இந்த 27 பொருட்கள் சதொச, Q-Shop மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படும். விலை குறைப்பை பொதுமக்களுக்கான சேவையாகக் கருதி, தனியார் துறை வர்த்தக நிறுவனங்களும் இதனை பின்பற்றும் என நம்புவதாக பந்துல குணவர்தன ஊடக சந்திப்பில் கூறினார். சதொச, Q-Shop மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் குறித்த 27 அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் 1998 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, எந்தவொரு மோசடி நடவடிக்கைகளையும் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Food Item

Open Market Price (Rs)

Revised Price (Rs)

Consumer Benefit

Red Kekulu (01 kg)

106

93

13

White Kekulu (01 kg)

105

93

12

White Nadu (01 kg)

109

96

13

Samba (01 kg)

120

99

21

Keeri Samba (01 kg)

140

125

15

Wheat Flour (01 kg)

105

84

21

White Sugar (01 kg)

110

99

11

Brown Sugar (01 kg)

140

125

15

 

01 Packet of Tea (100g)

130

95

35

Australian Red Dhal (01 kg)

188

165

23

Big Onion (01 kg)

140

120

20

Local Potato (01 kg)

216

180

36

Pakistan Potato (01 kg)

190

140

50

Gram / Kadala (01 kg)

225

175

50

Dried Chilli (01 kg)

550

495

55

Local canned fish (425 g)

240

220

20

Imported canned fish (425g)

280

265

15

 

Thai Sprats (01 kg)

700

575

125

Chicken (01 kg)

430

400

30

Salt  (o1 kg)

55

43

12

Milk Powder (400 g)

380

355

25

Soya Oil  (500 ml)

470

310

160

BCC Washing Soap (115 g)

53

43

10

Soap Bar (650 g)

325

260

65

Scented Soap (100 g)

63

56

7

Hand Wash (100 ml)

350

250

100

Face Mask (SLS Certified)

25

14

11