8 ஆம் திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

8 ஆம் திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

8 ஆம் திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Feb, 2021 | 5:02 pm

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது.

இந்த விலை குறைப்பு 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (05) தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, இந்த 27 பொருட்கள் சதொச, Q-Shop மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படும்.

விலை குறைப்பை பொதுமக்களுக்கான சேவையாகக் கருதி, தனியார் துறை வர்த்தக நிறுவனங்களும் இதனை பின்பற்றும் என நம்புவதாக பந்துல குணவர்தன ஊடக சந்திப்பில் கூறினார்.

சதொச, Q-Shop மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் குறித்த 27 அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் 1998 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எந்தவொரு மோசடி நடவடிக்கைகளையும் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Food Item Open Market Price (Rs) Revised Price (Rs) Consumer Benefit
Red Kekulu (01 kg) 106 93 13
White Kekulu (01 kg) 105 93 12
White Nadu (01 kg) 109 96 13
Samba (01 kg) 120 99 21
Keeri Samba (01 kg) 140 125 15
Wheat Flour (01 kg) 105 84 21
White Sugar (01 kg) 110 99 11
Brown Sugar (01 kg) 140 125 15

 

01 Packet of Tea (100g) 130 95 35
Australian Red Dhal (01 kg) 188 165 23
Big Onion (01 kg) 140 120 20
Local Potato (01 kg) 216 180 36
Pakistan Potato (01 kg) 190 140 50
Gram / Kadala (01 kg) 225 175 50
Dried Chilli (01 kg) 550 495 55
Local canned fish (425 g) 240 220 20
Imported canned fish (425g) 280 265 15

 

Thai Sprats (01 kg) 700 575 125
Chicken (01 kg) 430 400 30
Salt  (o1 kg) 55 43 12
Milk Powder (400 g) 380 355 25
Soya Oil  (500 ml) 470 310 160
BCC Washing Soap (115 g) 53 43 10
Soap Bar (650 g) 325 260 65
Scented Soap (100 g) 63 56 7
Hand Wash (100 ml) 350 250 100
Face Mask (SLS Certified) 25 14 11

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்