170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன

170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன

170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2021 | 3:42 pm

Colombo (News 1st) 170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுகளின் இறுதி பெயர்ப் பட்டியலை அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன.

அவற்றில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் 100 பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்