மியன்மார் தொடர்பில் கலந்துரையாட தென்கிழக்காசிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கு அழைப்பு

மியன்மார் தொடர்பில் கலந்துரையாட தென்கிழக்காசிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கு அழைப்பு

மியன்மார் தொடர்பில் கலந்துரையாட தென்கிழக்காசிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கு அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Feb, 2021 | 3:55 pm

Colombo (News 1st) மியன்மார் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தென்கிழக்காசிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய பிரதமர் முஹைதீன் யசீன், இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது இந்தோனேசிய ஜனாதிபதி ஜொக்கோ விடோடோவை சந்தித்த மலேசிய பிரதமர், மியன்மார் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளுக்கான அமைப்பில் இது தொடர்பில் கலந்துரையாடுமாறு இரு நாட்டு தலைவர்களும் தமது வௌிவிவகார அமைச்சர்களைக் கோரியுள்ளனர்.

இதேவேளை, ஆங் சான் சூகியின் கட்சியின் சிரேஷ்ட தலைவரைக் கைது செய்ததன் மூலம் மியான்மார் இராணுவம் முன்னாள் சிவில் அரசாங்கத்தின் மீதான தனது ஒடுக்குமுறையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

தேசிய லீக் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் வின் ஹீன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசத்துரோக சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்த இராணுவம், நாட்டைக் கைப்பற்றி ஒரு வருடத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வௌியாகவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்