தென்னையில் நோய்த்தொற்று; தேங்காய் உற்பத்தியில் தாக்கம்

தென்னையில் நோய்த்தொற்று; தேங்காய் உற்பத்தியில் தாக்கம்

தென்னையில் நோய்த்தொற்று; தேங்காய் உற்பத்தியில் தாக்கம்

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2021 | 3:04 pm

Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, வௌிநாடுகளில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், உள்நாட்டு தெங்கு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கரிசனை செய்ய அதிகாரிகள் தவறியுள்ளனர்.

தெங்கு முக்கோண வலயத்தில் ஒன்றான புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது உற்பத்தியாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தென்னைகளில் ஒரு வகை நோய் பரவி வருவதால் தேங்காய் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னை மரங்களில் உள்ள ஓலைகளில் இலை கொட்டியான் என்னும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதினால் தெங்கு உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெங்கு செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

இலை கொட்டி நோயை கட்டுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏனைய தென்னந்தோட்டங்களுக்கும் அது பரவக்கூடும் என தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்