by Bella Dalima 04-02-2021 | 6:54 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (05) நடைபெறவுள்ள அடையாள பணிப்பகிஷ்கரிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என சியம் நிகாயவின் அஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் வலியுறுத்தினார்.
வாழ்வாதார செலவுகளுக்கு அமைய தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தோட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கோரிக்கை விடுப்பதாகவும் மல்வத்து பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் குறிப்பிட்டார்.