COVID மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரிப்பு

COVID மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரிப்பு

by Staff Writer 03-02-2021 | 9:37 PM
Colombo (News 1st) கடந்த 25 ஆம் திகதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 44 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் பதிவாகியுள்ள மொத்த COVID மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. வெலிகம, கொழும்பு 15, வத்தேகம, நிட்டம்புவ, கெலிஓயா, கொழும்பு 2 மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 7 COVID மரணங்கள் பதிவாகின. இவர்களில் கொழும்பு 2-ஐ சேர்ந்த 18 மாத குழந்தையொன்றும் அடங்குகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தக் குழந்தை COVID நிமோனியாவினால் உயிரிழந்துள்ளது. எனினும், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து காணப்படும் COVID வைரஸ் நிலமையே தற்போதும் இலங்கையில் காணப்படுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நலீகா மலவிகே தெரிவித்தார். அதிகளவில் நோயாளர்கள் பதிவாகின்றமை, மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணம் என அவர் கூறினார். இதேவேளை, நாட்டில் 1,18, 767 பேருக்கு Astrazeneca Covishield தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால், Covax சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.