மியன்மார் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மியன்மாரில் வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 03-02-2021 | 12:27 PM
Colombo (News 1st) மியன்மாரிலுள்ள 70 வைத்தியசாலைகளின் ஊழியர்கள் மற்றும் 30 நகரங்களில் உள்ள மருத்துவ திணைக்களங்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன. மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவப் புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. கொரோனா தொற்று காரணமாக 3100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் தெற்காசியாவில் அதிகம் உயிரிழந்தவர்கள் உள்ள நாடாகவும் மியன்மார் பதிவாகியுள்ளது. எனினும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் கரிசனை செலுத்தவுள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இராணுவப் புரட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கோ அழுத்தங்களுக்கோ அடிபணியப் போவதில்லை என தெரிவித்துள்ள சுகாதாரத் தரப்பினர், கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இராணுவ புரட்சியாளர்கள் எவ்வித கரிசனையையும் கொள்ளவில்லை எனவும் சாடியுள்ளனர். மியன்மாரில் நேற்று முன்தினம் (01) இராணுவப்புரட்சி மேற்கொள்ளப்பட்டதுடன், நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூகி உட்பட தலைவர்கள் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு ஓராண்டுக்கு அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.