by Staff Writer 03-02-2021 | 9:58 AM
Colombo (News 1st) தென்னந்தோட்டங்களை சிறு துண்டுகளாக பிரிப்பது தொடர்பில், தற்போது காணப்படும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, 10 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்டங்களை சிறு துண்டுகளாக பிரிக்க முடியும் என தெங்கு, பனை, கித்துள் மற்றும் இறப்பர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அதனை இரண்டரை ஏக்கர்களாக மட்டுப்படுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தென்னந்தோட்டங்களை சிறு துண்டுகளாக பிரித்து விற்பனை செய்வதால் நாட்டின் தெங்கு அறுவடைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு , திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன தெரிவித்துள்ளார்.