ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் 

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் 

by Staff Writer 03-02-2021 | 11:24 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை அறிந்தவுடனேயே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் தலைவர்களை சந்தித்ததாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை உயர்ஸ்தானிகர் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக த ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தௌிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என நம்பவுதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அல்லது மாற்று யோசனை குறித்து இந்தியாவிற்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என உயர்ஸ்தானிகராலய தகவல்களை மேற்கோள்காட்டி 'த ஹிந்து' செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கை, தனது சர்வதேச ஒப்பந்தத்தை கைவிடுவது இது இரண்டாவது முறையாகும் எனவும் குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக, ஜப்பானுடனான இலகு ரயில் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கும் இலங்கை அரசு தீர்மானித்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது