கிழக்கு முனையத்தை பாதுகாக்க முடிந்தமை அரசாங்கத்தின் வெற்றி: அமைச்சர்கள் தெரிவிப்பு

by Staff Writer 03-02-2021 | 8:46 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முடிந்தமை அரசாங்கம் அடைந்த வெற்றி என அமைச்சர்கள் சிலர் இன்று குறிப்பிட்டனர். அதற்காக அவர்கள் இன்று ஜனாதிபதிக்கு நன்றி கூறினர். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 10 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.