வவுனியா உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

வவுனியா உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

வவுனியா உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2021 | 1:48 pm

Colombo (News 1st) வவுனியாவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதந்திர தினத்தன்று முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வவுனியா பொலிஸார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தடை உத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ()4) முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வவனியா ஏ – 9 வீதியிலோ அல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ பழைய பஸ் நிலையம் முன்பாகவோ 73 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளை விடுவிக்காமை தொடர்பான கருத்துகளை பிரதானமாக முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவோ அல்லது ஆர்ப்பாட்டம், கால்நடை யாத்திரை போன்றவற்றை முன்னெடுக்கவோ தடை உத்தரவு கோரி நீதிமன்றிற்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம், பொது சுகாதாரம் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிய முடிவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் குறித்த பிரதேசங்களில் இன்று ()3) முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை, சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 46 ஆவது ஜக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வை இலக்காக கொண்ட ஆர்ப்பாட்டம், அல்லது பாத யாத்திரை அல்லது வேறு குற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக்கூடாதெனவும் நீதிமன்றம் உத்தரவிடபட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்