டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள்: கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள்: கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள்: கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2021 | 3:12 pm

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பொப் பாடகி ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடியுள்ளார்.

‘டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீன காலனியாக மாற்ற முடியும். முட்டாள்… நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’

என கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஹானாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

போராடும் விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய கங்கனா ரணாவத்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்