by Staff Writer 02-02-2021 | 8:05 AM
Colombo (News 1st) AstraZeneca தடுப்பூசி பெற்றுக் கொண்ட எவருக்கும் குறிப்பிடத்தக்களவு ஒவ்வாவை ஏற்படவில்லை என COVID - 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படும் முறைமையின் கீழ் நாட்டின் சனத்தொகையில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60,000 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.