ஹட்டனில் விபத்தில் 6 பாடசாலை மாணவர்கள் காயம்

ஹட்டனில் விபத்தில் 6 பாடசாலை மாணவர்கள் காயம்

by Staff Writer 02-02-2021 | 4:59 PM
Colombo (News 1st) ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ஹட்டன் - சலங்கந்த பிரதான வீதியின் டிக்கோயா ஒட்டரிதோட்டம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 16 வயதான பாடசாலை மாணவரே முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளதுடன், வண்டியில் குறித்த மாணவர் உள்ளிட்ட 6 மாணவர்கள் பயணித்துள்ளனர். முச்சக்கர வண்டியின் சாரதியான பாடசாலை மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.