வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2021 | 7:00 pm

Colombo (News 1st) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு வருடங்களாக போராடியும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று (02) முதல் 6 ஆம் திகதி வரை சுழற்சி முறையில் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் இணைப்பாளர் க.கோகிலவாணி குறிப்பிட்டார்.

தமது உறவுகள் கிடைக்கும் வரை தமக்கு சுதந்திர தினம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்