தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்தது அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்தது அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்தது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2021 | 6:18 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இரு அணிகளும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருந்தன.

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் நிலவும் சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு தொடரை ஒத்திவைக்க தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடருக்கான 19 பேர் கொண்ட கிரிக்கெட் குழாத்தை அவுஸ்திரேலியா அறிவித்துள்ள போதும், தொடர் எப்போது இடம்பெறும் என்பது அறிவிக்கப்படவில்லை.

தற்போதைய சூழலில் தென்னாபிரிக்காவிற்கு பயணிப்பது கிரிக்கெட் வீரர்களுக்கு பாரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிறைவேற்று பணிப்பாளர் நிக் ஹோக்லி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்