தடுப்பூசி காரணமாக இஸ்ரேலில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

தடுப்பூசி காரணமாக இஸ்ரேலில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

தடுப்பூசி காரணமாக இஸ்ரேலில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2021 | 9:26 am

Colombo (News 1st) இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதை அடுத்து, தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நோய் நிலைமைகள் மற்றும் தொற்றுக்குள்ளாகும் நிலைமைகள் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இஸ்ரேலில் தற்போது முடக்கல் அமுலிலுள்ள போதிலும், அதனால் மாத்திரம் கொரோனா தொற்று குறைவடையவில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஆகவே, தடுப்புமருந்தின் செயற்றிறன் வௌிப்பட ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

60 வயதுக்கு மேற்பட்ட தடுப்புமருந்து முழுமையாக வழங்கப்பட்ட 750,531 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்