கிம்புலா எல குணாவும் அவரது மகனும் சென்னையில் கைது

கிம்புலா எல குணாவும் அவரது மகனும் சென்னையில் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2021 | 2:12 pm

Colombo (News 1st) கிம்புலா எல குணா அவரது மகன் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து புது டெல்லிக்கு விமானம் மூலம் செல்வதற்கு முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐந்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக Times of India செய்தி வௌியிட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்வதற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் கிம்புலா எல குணாவிற்கு தொடர்புள்ளமை இந்திய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடப்பட்ட குற்றவாளியான ஜெமினி பொன்சேகா எனப்படும் சுனில் காமினி கடந்த ஒக்டோபர் மாதம் பெங்களூரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின்போதே கிம்புலா எல குணா கைது செய்யப்பட்டுள்ளார்.

கிம்புலா எல குணாவிற்கு LTTE இனருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் Times of India செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்