வந்தாறுமூலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வந்தாறுமூலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வந்தாறுமூலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2021 | 2:40 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வந்தாறுமூலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து செங்கலடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் செங்கலடி பிரதான வீதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்