வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2021 | 3:47 pm

Colombo (News 1st) வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (01) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போதும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக சுமார் 60 வரையான தொண்டராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களினால் ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்