நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்

நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்

நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2021 | 7:07 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் நாளை (01) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில்,

நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம் – அன்றூஸ் வீதி, புனித அன்றூஸ் பகுதி (கீழ்/மேல்) ஆகியவற்றில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.

பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 90 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்