தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை

தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை

தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2021 | 4:03 pm

Colombo (News 1st) 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்கவிடுமாறு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களின் கட்டடங்களை எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் ஒளி விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்