கிழக்கு முனைய விவகாரம்: தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு 6 யோசனைகளை  முன்வைத்துள்ளன

கிழக்கு முனைய விவகாரம்: தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு 6 யோசனைகளை  முன்வைத்துள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2021 | 9:10 pm

Colombo (News 1st) கிழக்கு முனையம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 6 யோசனைகளை நேற்று (29) முன்வைத்துள்ளன.

அவற்றில் தெரிவித்திருப்பதாவது,

  • பூகோள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்காக மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கி அபிவிருத்தி செய்தல் வேண்டும்
  • CICT நிறுவனத்தை ஸ்தாபிக்கும் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு நிகரான ஒப்பந்தத்தை கைச்சாத்திடல் வேண்டும்
  • கிழக்கு முனையத்தை வழங்குவதற்கான முடிவு, மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்தல் என்பவற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை ஒரே தடவையில் பெறல் வேண்டும்

என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றியம் இன்று மாலை ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

  • மேற்கு முனையம் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கும்
  • கிழக்கு முனையத்தின் நூறு வீதமான உரிமை மற்றும் முகாமைத்துவம் துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்து அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்

என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்