by Staff Writer 30-01-2021 | 2:34 PM
Colombo (News 1st) கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த போது தொழில் வழங்குனர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய 293 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாடு திரும்பிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 20 விமானங்களில் 687 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 83 பேரும் அபுதாபியில் இருந்து 77 பேரும் பாகிஸ்தானில் இருந்து 89 பேரும் பங்களாதேஷில் இருந்து 34 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்.