இன்று 100 வைத்தியசாலைகளில் Covishield தடுப்பூசி வழங்கப்படுகிறது

by Staff Writer 30-01-2021 | 2:27 PM
Colombo (News 1st) இந்தியாவின் AstraZeneca Covishield தடுப்பூசி இன்று 100 வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக COVID நோய்க் கட்டுப்பாடு மற்றும் ஆரம்ப சுகாதாரம் தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரவித்தார். இதற்கு தேவையான தடுப்பூசிகள் பிராந்திய ஔடத களஞ்சியங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 10 நாட்களுக்குள் முதலாவது தொகுதி தடுப்பூசிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 05 இலட்சம் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.