COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு SLC-க்கு அழைப்பு

COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு

by Bella Dalima 29-01-2021 | 3:00 PM
Colombo (News 1st) எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி COPE எனப்படும் பாராளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் பெப்ரவரி 12 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக COPE குழுத்தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, நாட்டின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையும் கவனத்திற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, கண்டி மாவட்டத்தில் அபாயமிக்க வலயத்தில் வசிக்கும் மக்களை மீள் குடியேற்றுவதற்கான திட்டத்தின் தரம் குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக COPE குழு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் இறக்குமதியை முகாமைத்துவம் செய்தலும் அவற்றின் பாவனை தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கை பரிசீலனையும் எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெறும் என COPE குழுத்தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்