இபோச-வின் நாளாந்த வருமானம் 40MN ரூபாவால் வீழ்ச்சி

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி

by Staff Writer 29-01-2021 | 3:26 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால் வருமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி A.S.B.வீரசூரிய தெரிவித்தார். இதனடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 45 தொடக்கம் 80 மில்லியன் ரூபாவிற்கிடையில் காணப்படுவதாக அவர் கூறினார். தற்போது 4500-க்கும் மேற்பட்ட இ.போ.ச பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நடவடிக்கை பிரிவு அதிகாரி சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.