by Staff Writer 29-01-2021 | 4:43 PM
Colombo (News 1st) அம்பாறை - உஹண பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைகளுக்காக கந்தளாயிலிருந்து அம்பாறைக்கு வருகை தந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதன்போது, குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உஹண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.