by Staff Writer 28-01-2021 | 3:18 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள PCR பரிசோதனையில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வருமாறு படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
வாரத்தில் ஒரு தடவை பாராளுமன்ற கட்டடத்தில் எழுமாற்றாக PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுமென படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வு நடைபெறும் நாளொன்றிலும் பாராளுமன்ற அமர்வு நடைபெறாத நாளிலும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த 25 ஆம் திகதி இறுதியாக 190 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.