காச நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

தொடர்ச்சியாக அதிகரிக்கும் காச நோயாளர்களின் எண்ணிக்கை

by Staff Writer 28-01-2021 | 1:59 PM
Colombo (News 1st) நாட்டில் காச நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 வீதமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திற்குள் இருப்பதாக காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் வருடாந்தம் 8,000 முதல் 9,000 காச நோயாளர்கள் பதிவாகுவதாக காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பின் பிரதி பணிப்பாளர், வைத்தியர் நிரூபா பல்லேவத்த கூறியுள்ளார். 55 வயதுக்கு மேற்பட்டவர்ளே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்படாத சுமார் 5,000 பேர் நோய் காவிகளாக நம் மத்தியிலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது மிகவும் ஆபத்தானது என கூறிய வைத்தியர், சில நோயாளர்கள் உரிய வகையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளாமல் ஏனையோருக்கும் அதனை பரப்புவதாக குறிப்பிட்டார். வருடத்தில் சுமார் 500 பேர் காச நோயினால் உயிரிழக்கின்றதாக வைத்தியர் தெரிவித்தார். உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் நகரங்களில் வசிப்பவர்களியே அதிகமாக இந்த நோய் பரவுகின்றதாகவும் அவர் கூறினார். குறித்த நோயாளர்களில் 23 வீதமானோர் கொழும்பு மாவட்டத்தில் உள்ளதுடன், 40 வீதமானோர் மேல் மாகாணத்திலுள்ளதாக காச நோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பின் பிரதி பணிப்பாளர், வைத்தியர் நிரூபா பல்லேவத்த தௌிவுபடுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்