கொரோனா பெருந்தொற்றை செயற்றிறனுடன் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் இலங்கை

by Bella Dalima 28-01-2021 | 6:02 PM
Colombo (News 1st) கொரோனா பெருந்தொற்றை செயற்றிறனுடன் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் Lowy மதிப்பீட்டு நிறுவனம் முன்னெடுத்த ஆய்வில், இலங்கை 10 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. Lowy நிறுவனத்தின் மதிப்பீட்டிற்கிணங்க, பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்து ஏனைய நாடுகளை விட பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் மிக சிறப்பாக செயற்பட்டுள்ளது. 98 நாடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டில் இந்தியா 86 ஆவது இடத்தில் உள்ளது. உக்ரைன் பட்டியலில் 90 ஆவது இடத்திலும் அமெரிக்கா 94 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. நியூஸிலாந்தைப் போன்றே சிறப்பாக செயற்பட்ட வியட்நாம், தாய்வான், தாய்லாந்து ஆகியன முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மிகச்சிறிய நாடுகளான சைப்ரஸ், ருவாண்டா, ஐஸ்லாந்து மற்றும் லட்வியா ஆகியன முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளன.