வதுரமுல்ல மயானத்திலிருந்து துப்பாக்கி கைப்பற்றல்

கெசல்வத்தை துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது

by Staff Writer 28-01-2021 | 6:14 PM
Colombo (News 1st) பாணந்துறை - கெசல்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. கல்கிசை பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை - வதுரமுல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கெசல்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தரப்பினர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.