மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை 

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை 

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை 

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2021 | 10:31 am

Colombo (News 1st) மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி இன்று (28) கொரோனா தொற்றுக்கான பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

வௌி மாவட்டங்களுக்கு வௌியேறக்கூடிய 12 இடங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர மாகாணத்திற்குள்ளும் இன்று விசேட சோதனைகள் மற்றும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மரக்கறி, மீன் விற்பனையாளர்கள், வாராந்த சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்களை அண்மித்து பணியாற்றும் ஊழியர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பிலிருந்து வௌியேறும் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்